ஒபாமாவின் மகள் உணவகமொன்றின் வேலை பார்க்கிறார்...!

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மகள் சாஷா ஒபாமா, வெள்ளை மாளிகையின் வசதிகளை துறந்து, கடலுணவு உணவகமொன்றின் சேவை முகப்பு நிலையமொன்றில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 மஷஷூஷஸ் மாநிலத்தில் உள்ள மர்தாஸ் வின்யார்ட் தீவிலுள்ள வர்த்தக 
நிலையமொன்றில், கோடைகால வேலையாக, 15 வயதான சாஷா உணவு பரிமாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது முழுப் பெயரான நதாஷா எனும் பெயரைப் பயன்படுத்திய சாஷா, உணவகத்தில், ஆறு பேரைக் கொண்ட இரகசிய சேவை முகவர்களுடனேயே உணவகத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறைகளின் மேற்கூறப்பட்ட மர்தாஸ் வின்யார்ட்டே, ஒபாமா குடும்பத்தினரின் விரும்பத்தக்க இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒபாமாவின் இளைய மகளான சாஷா, குறித்த உணவகத்தின் சீருடையான நீல நிற டி-ஷேர்ட்டையும் தொப்பியையும் அணிந்து பணியாற்றுவதை புகைப்படங்கள் காண்பித்துள்ளன. 

இதேவேளை, கருத்து தெரிவித்த சக ஊழியர் ஒருவர், உணவு எடுத்துச் செல்லும் இடத்தில், கீழ் மாடியில் அவர் பணியாற்றியதாகவும், அந்த யுவதிக்கு ஏன் ஆறு பேர் உதவுகின்றனர் என தாங்கள் ஆச்சரியப்பட்டதாகவும், எனினும் பின்னர் அவர் யார் என கண்டுகொண்டதாக கூறியுள்ளார். மேற்குறித்த தகவல் குறித்து வெள்ளை மாளிகை கருத்து எதனையும் தெரிவிக்காத போதும், தனது இரண்டு மகள்களையும் இயலுமானவரை சாதாரண நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதாக முதற் பெண்மணி மிச்செலி ஒபாமா தெரிவித்திருந்தார். 

உணவு எடுத்துச் செல்லும் முகப்பு நிலையத்தில் பணியாற்றுவது தவிர, மதிய நேரத்துக்கு உணவகத்தை திறப்பதற்காக உணவகத்தை தயார்படுத்த உதவி செய்வது மற்றும் மேசைகளில் உணவு பரிமாறுவதும் சாஷாவின் ஏனைய பணிகளாக உள்ளன. சாஷா பணியில் ஈடுபடும்போது அவரது அணியினர், அருகிலுள்ள பாரிய காத்திருக்கின்றனர் அல்லது மேசைகளில் அமர்ந்திருக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -