கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இறக்காம வீதிகள் அபிவிருத்தி..!

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் ஊடாக மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இறக்காம மானிக்கமடு வீதி மற்றும் இறக்காமம்- அக்கரைப்பற்று, வரிபத்தான்சேனை வீதி வடிகான் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மேற்படி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (15) இறக்காமத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபெதி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இனைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம், இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் எஸ்.ஐ மன்சூர், ஆகியோர் கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக சுமார் 3.5மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் மானிக்கமடு வீதி 1Km அபிவித்தி செய்யப்படவுள்ளதுடன், சுமார் 3.3மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் ஊடாக இறக்காமம் அக்கரைப்பற்று வீதி 200M, வர்ப்பத்தான்சேனை வீதி 400M வீதிக்கான வடிகான் என்பனவும் இத்திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான இவ்வீதிகள் நீண்டகாலமாக சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -