இவ்வருட புனித ஹஜ் கடமைக்ககா புனித மக்கா செல்லும் ஹாஜிகளை உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கும் நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
வ்வருட புனித ஹஜ் கடமைக்ககா புனித மக்கா செல்லும் ஹாஜிகளை உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த புதன் கிழமை (17) பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது ஒரு தொகுதி ஹாஜிகள் சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் ஜித்தா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச்.எம்.பௌசி, அமைச்சின் செயலாளர் டி.ஜி. எம். வி. ஹப்பு ஆராச்சி, ஹஜ் குழுத் தலைவர் டொக்டர் ஸியாத் தாஹா, அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம், இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகத்தின் இரண்டாவது அதிகாரி முஹமட் பின் முஹமட் அல்லாப், அலி அல்- உம்ரி , திணைக்களத்தின் அதிகாரிகள், முகவர் நிலையங்களின் அதிகாரிகள், சிறிலங்கன் எயார் லைன்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -