மாகாண ஆட்சி என்பது ஒரு போலியானது என மக்கள் ஒதுக்கி விடுகின்றனர் - நஸீர் அஹமட்



மாகாணங்களின் புதிய அதிகாரப் பகிர்வு சம்மந்தமாக இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் முதலமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், அரசியல்துறைப் பேராசிரியர்கள், நிர்வாகச் செயலாளர்கள், வெளிநாட்டு அரசியல் சட்டத்துறை வல்லுனர்கள் என முக்கியஸ்தர்களை அழைத்து இலங்கையின் மாற்றுக்கொள்கை நிலையம் (CPA) எனும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்து இம்மாநாடு திறமையாக நேற்று முதல் நாள் முடிந்து இன்று இரண்டாம் நாள் இறுதி நாளாக இடம்பெறுகிறது.

மாற்றுக்கொள்கை நிலையம் நடாத்தும் இம்மாநாட்டின் நோக்கமே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் அதிகாரங்கள் முடக்கப்பட்டுள்ளதனை மீண்டும் முழுமையாகவும், சரியாகவும் வழங்கவேண்டும் என்பதனைப் பற்றி ஆராய்தல் அதுசம்மந்தமாக கருத்துக்களைப் பரிமாறலுடன் ஏனைய மாகாணங்களின் பிரச்சனைகள் மற்றும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இருக்கும் சாதக பாதங்களை ஆராய்தல் இதனை முழுமையாக அமுல்படுத்துவதால் ஏற்படும் ஆதரவுகள், எதிர்ப்புகள் எவ்வாறு இருக்கிறன என்பது தொடர்பாக அனைவராலும் நீளமான கருத்துக்கள் கூறப்பட்டன.

இம்மாநாட்டுக்கு வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்ணேஷ்வரன் வருகைதரவில்லை ஆனால் அவர் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தால் மிகவலுவாக அமைந்திருக்கும் ஏனென்றால் அவரும் ஒரு நீதித்துறையில் முதிர்ச்சி பெற்றவர் என்பதால் சட்டங்களைப் பற்றியும் பேசியிருக்கலாம், எனவே வடக்கு முதலமைச்சர் சமூகம் கொடுக்காதபோதிலும் அவர்சார்பாக வடமாகாண எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராஸா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை மிக சிறப்பாக முன்வைத்தனர்.
அதில் வடமாகாண எதிர் கட்சித்தலைவர் எஸ்.தவராசாவின் கருத்துக்கள் மிகவும் பிரயோசனமானதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில்:

மாகாண ஆட்சி என்பது ஒரு போலியான நடைமுறையில் இருந்து கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன்.
ஏன் என்றால் மாகாண சபை என்பது அவர்களின் அதிகாரங்களின் மூலம் மக்களின் தேவைகளும், மாகாணத்துக்கான அபிவிருத்திக்கும் முன்னின்று அவைகளை செயல்படுத்த முடியாது என்றால் எதற்கு அந்த மாகாணசபை என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும் என்பதில் ஐயமில்லை.. இன்று மக்கள் நலனிலும் தன் நாட்டு நலனிலும் அதிக அக்கறை கொண்ட அரசியல்தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மக்களின் ஆணை கிடைத்தபின்னரும் அதிகார வர்க்கத்தின் தடைகள் ஏற்பட்டால் அவர்களுடைய கனவுகள் தன் நாட்டுக்கு, தன்மாகாணத்துக்கு செய்ய நினைத்த சேவைகள், நல்ல சிந்தனைகள் மழுங்கடிக்கப் பட்டுவிடுவதாக நான் உணர்கிறேன்.

எனவே மாகாணத்துக்கான அதிகாரங்கள் சரியான முறையில் வழங்கப்படுமிடத்து ஒவ்வொரு மாகாணமும் ஏதோ ஒரு முறையில் சிறந்து விளங்கும் என்பது நிஜமானதே.. உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏராளமான தேவைகள் இருக்கிறது. கடந்தகால யுத்தத்தின்போது பலவகையிலும் பாதிகப்பட்ட, இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் சரியான தீர்வுகளின்றி இருந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் அவர்களின் பிரதேசத்துக்கும் நிரந்தர அபிவிருத்தி வழங்குவது ஒவ்வொரு மாகாண சபைகளின் கடமையாகும். அதுபோல் ஒவ்வொரு மாகாணங்களிலும் வேலையற்ற பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்கள், சுகாதாரத் தொண்டர்கள் என பலர் உள்ளனர். இந்த நிலைமைகளுக்கெல்லாம் தீர்வு வேண்டும்.

எனவே இவைகளையறிந்து சிறந்த சேவைகளை மக்களுக்கும், மாகாணத்துக்கும் வழங்க சரியான அதிகாரம் குறைவில்லாமல் வழங்கப்படவேண்டும், அதனை வழங்கிப் பாருங்கள் ஒவ்வொரு மாகாணமும் சிங்கப்பூர் என்ன அதனைவிட சிறந்த ஒரு வல்லரசாக மாற்றிக்காட்டலாம். இதற்கு இம்மாநாட்டின் தீர்மானங்கள் வளிவிடுமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்று தெரிவித்தார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -