பிஸ்கட் கொடுத்து 7வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18வயது இளைஞன் சிக்கினான்..!


ட்டக்களப்பு காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். 

கிரான்குளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பூவரசந்தெருவிலுள்ள 7 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது அப்பிரதேசத்திலுள்ள 18 வயதுடைய இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

இதையடுத்து, வீடு வந்த சிறுவன் அம்மாவிடத்தில் விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுவனை அழைத்துக் கொண்டு சிறுவனின் அம்மா காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். 

இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதரவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் துரிதமாக விசாரணை செய்த பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.நிசாந்த தலைமையிலான பொலிஸ் குழு குறித்த சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர். 

குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சிகிச்கைச்கென அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவனுக்கு 25 ரூபா பணமும் ஒரு பிஸ்கட் பக்கட்டும் வழங்கி அந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -