கொழும்பு ஆனாந்தாக் கல்லுாாியின் 2016ஆம் ஆண்டுக்கான விடுதி மாணவா்களுக்கான விடுதி விழா

அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பு ஆனாந்தாக் கல்லுாாியின் 2016ஆம் ஆண்டுக்கான விடுதி மாணவா்களுக்கான விடுதி விழா கல்லுாாியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் இக் கல்லுாாியின் பழைய மாணவருமான இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் உரையாற்றுகையில் -


அன்று இக் கல்லுாியின் விடுதி மாணவனாக கல்வி கற்கும்போது என்னுடன் பலப்பிட்டியைச் சேர்நத் இஸ்மாயில், தமிழ் மாணவா்களாக நடேசன், சிவசேகரன், லக்ஸ்மன் என 4 இனங்களையும் சாா்ந்த மாணவா்கள் ஒரு குடும்பம் போன்று ஒரே கூரையின் கீழ் கல்விகற்றோம். எங்களுக்கு இன, மத கலை, கலாச்சார வேறுபாடுகள் இருக்கவில்லை, நான் ஒரு முஸ்லீமாக இருந்தும் பெரும்பாண்மையான சிங்கள மாணவா்கள் என்னையே மாணவ பாராளுமன்ற தலைவா், விவாத சங்கத்தின் தலைவா், கொக்கி. டெனிஸ் போன்ற விளையாட்டுக்களின் தலைவராக தெரிபு செய்து தலைமைத்துவத்தை தந்தாா்கள், அன்று பெளாத்தம், ஹி்ந்து, இஸ்லாமிய நிகழ்வுகள் பெருநாட்கள் கலந்து கொள்வோம். நாம் இந்த நாட்டில் இலங்கையன் என்ற உணா்வு அன்றும் இன்றும் ்இருக்கின்றது.இப்போது அந்த ஜக்கியம் அரிதாகவே உள்ளது. 

எங்களது ஆசிரியா்களான ஆர்.சிவகுருநாதன், பாலசிங்கம், ரி.பி ஜயா போன்ற ஆசிரியா்கள் கற்பித்தாா்கள். இந்தக் கல்லுாாியில் கூட குலரத்தின அவா்கள் அதிபராக இருக்கும்போது கலாநிதி ரீ.பி ஜயா வகுப்பாசிரியராக இருந்துள்ளாா்கள். அப்போது அவரது வகுப்பில் குழப்படியாக இருந்த மாணவன் பிலிப் குணவர்த்தன அவரை கல்லுாாி அதிபா் கல்லுாாியில் இருந்து அகற்ற முடிவு எடுத்த போது ரீ.பி ஜயா அவா்கள் அதிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிலிப்குணவா்ததன நீக்கப்பட்டால் நானும் இக் கல்லுாாியில் இருந்து வெளியே செல்கின்றேன். எனக் கூறியதை அடுத்து அதிபா் அவரது முடிவை வாபஸ் பெற்றாா். பின்னா் பிலிப் குணவா்த்தன கல்லுாரியில் சிறந்த மாணவனாக விளங்கி லண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை பெறச் சென்று அங்கு சென்றதும் தனது முதலாவது கடிதத்தை பெற்றோருக்கு எழுதாமல் அவரது சிறந்த ஆசிரியா் கலாநிதி ரீ.பி ஜயாவுக்கே எழுதினாா். என முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் அங்கு மாணவா்கள் மத்தியில் ்உரையாற்றினாா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -