திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நூறு வீடுகளை புனரமைக்க நடவடிக்கை..!

எப்.முபாரக்-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட 100 வீடுகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பக்குமார தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பகுதியளவில் பாதிக்கப்பட்ட 100 வீடுகளுக்கான பாதீட்டுக்காக புனர்வாழ்வளிப்பு அமைச்சினால் ஒரு வீட்டுக்கான பாதீடாக 02 இலட்சம் திட்டமிட்டமிட்டுள்ள நிலையில் 100 வீடுகளுக்கும் 20 மில்லியன் ரூபாய் நிதி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிதியிலிருந்து, முதற்கட்டமாக 50 வீதமான நிதியாக 10 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் பகுதியளவில் வீடுகளை திருத்துவதற்காக பிரதேச செயலக ரீதியாக வெருகல் பிரதேச செயலகத்துக்கு 11 வீடுகளும், மூதூர் பிரதேச செயலகத்துக்கு 13 வீடுகளும், சேருவில பிரதேச செயலகத்துக்கு 09 வீடுகளும், மொரவௌ பிரதேச செயலகத்துக்கு 05 வீடுகளும், கோமரங்கடவல பிரதேச செயலகத்துக்கு 20 வீடுகளும், கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு 09 வீடுகளும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு 06 வீடுகளும், பதவிசிறிபுர பிரதேச செயலகத்துக்கு 04 வீடுகளும், தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு 09 வீடுகளும், குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு 09 வீடுகளும், கந்தளாய் பிரதேச செயலகத்துக்கு 05 வீடுகளும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை, வேலைகளை இம்மாத இறுதி பகுதியில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -