தங்க பிஸ்கட் நோன்பு பெருநாள் நன்கொடையாக வழங்கிய பெண்மனி

எம்.ரீ.எம்.பாரிஸ்-

ட்டக்களப்பு கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை  இன்று (06.07.2016) காலை 6.20 மணிக்கு செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகையினையும்,குத்பா பேருரையினையும் ஜமாஆத்தின் பொது தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) நடாத்தினார்.

தொழுகையில் கலந்து கொண்டோரால் பெருநாள் நன்கொடைகளும் வழங்கப்பட்டிருத்தன ஆண்கள் வேறாக பெண்கள் வேறாக தமது நன்கொடைகளை வழங்கி இருத்தனர்.

இதன் போது பெண்கள் பகுதியில் இருத்து தன்னை யார் என்று காட்டிக்கொள்ள விரும்பாத பெண்மனி ஒருவர்167,440.00ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட் ஒன்றினை தமது பெருநாள் நன்கொடையாக வழங்கி இருப்பதாக கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் பொது தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீ.முஹம்மத் (காஸிமி) தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் இச் செயற்பாட்டினை பார்க்கும் போது நபி முஹம்மத்(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் இவ்வாறே தமது பெருநாள் கொடைகளை தங்கங்களாக வழங்கி இருத்திருக்கின்றார்கள் என்ற வரலாற்று உண்மையையும் பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.

இம்முறை பெருநாள் நன்கொடை நிதியாக 327,950.00 ரூபாய் கிடைக்கபெற்றுள்ளதாகவும் இந்த தர்மத்தினை வழங்கிய அனைவருக்கும் ஜம்இய்யா சார்பில் தமது நன்றிகளை தெரிவித்தார்.

வரலாறு கானாத அளவில் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும்,சிறார்களும்; கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -