கலாநிதி தீன் முஹம்மதுவின் குத்பா நிறுத்தம்- அக்கரைப்பற்று பள்ளியில் நடந்தது என்ன..!


அஷாம் அமீர்-

த்தார் பல்கலைக் கழகத்தின் பீடாதிபதி கலாநிதி பேராசிரியர் தீன் முஹம்மத் அவர்களை 22.07.2016 அன்று குத்பா பேருரை நிகழ்த்துமாறு பல வாரங்களுக்கு முன்னரே பட்டினப் பள்ளிவாயால் நிருவாகம் உத்தியோகபூர்வமாக விடுத்திருந்த அழைப்பை, சில
“தனி நபர்களின்” அச்சுறுத்தல் காரணமாக மீளப் பெற்றுக் கொள்வதாக வியாழக் கிழமை (21.07.2016) அன்று இரவு நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் ஜனாப் ஏ ம் ரஹ்மாதுள்ளஹ்வினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி நிருவாக சபைக்கு முறையாக அறிவிக்காமல் ஒருதலைப் பட்சமாக எடுக்கப்பட்ட இம் முடிவால், நிருவாக சபை உறுப்பினர்கள் மட்டும் அன்றி பள்ளி ஜமாஅத்தினரும் பரந்துபட்ட எதிர்பை வெளியிடிருந்தனர்.

நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த நிருவாகம் வெள்ளிக் கிழமை (22.07.2016) அன்று காலை அவரின் வீடு சென்று கலாநிதி பேராசிரியர் தீன் முஹம்மத் அவர்களை குத்பா பேருரை நிகழ்த்துமாறு எழுத்து மூலம் மீண்டும் அழைப்பு விடுத்திருந்தனர்.

நிருவகத்தினரின் முன்னய செயட்பாடினால் அதிருப்தியுற்றிந்த கலாநிதி பள்ளியின் வேண்டுகோளை நிராகரித்ததன் காரணமாக வேறோருவரைக் கொண்டு குத்பா நிகழ்த்த வேண்டிய நிலை ஏற்றபட்டது.

சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற கலாநிதி பேராசிரியர் தீன் முகம்மது விடயத்தில் அக்கரைப்பற்று பட்டினப் பள்ளியின் அனுபவ முதிர்ச்சி இன்றிய இச் செயற்பாடுக்கு பலரும் தாங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை தோற்றுவித்திருக்கும் இந்த விடயத்தில் பட்டினப் பள்ளி ஜமா அத்தினரையும் பொதுமக்களையும் பொறுமை காக்குமாறு கலாநிதி பேராசிரியர் தீன் முகம்மது அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -