எம்.எம்.ஜபீர்-
நோன்பு பெருநாளை முன்னிட்டு மாஹிர் பவுன்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மஹிரின் அணுசரனையில் சம்மாந்துறை பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 650 குடும்பங்களுக்கு அரிசி பொதிகளை வழங்கும் நிகழ்வு செந்நெல் கிராம மதரஸா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
சம்மாந்துறை செந்நெல் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.உஸனார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட குடும்ப தலைவர்களிடம் அரிசி பொதிகளை வழங்கி வைத்தார்.