வைத்தியர்கள் கடமையேற்கும் கடிதம் வழங்கி வைப்பு...!

அபு அலா, சப்னி அஹமட் - 
புதிதாக நியமனம் பெற்று வந்த 21 வைத்தியர்கள் தங்களின் கடமையேற்கும் வைத்தியசாலையின் கடிதத்தினை கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர் வழங்கி வைத்தார். 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம் அலாவுடீன் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலயத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்றது. 

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 08 வைத்தியர்களும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 06 வைத்தியர்களும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும், இறக்கமாம் பிரதேச வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும், தீகவாபி பிரதேச வைத்தியசாலைக்கு 01 வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடமையாற்றும் வைத்தியசாலைகளின் கடிதங்களை பெறுப்பெற்ற வைத்தியர்கள் தங்களின் கடமைகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் வேண்டிக்கொண்டார். இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -