கட்சியை செவ்வன நடாத்தும் ஹக்கீம் - நசீர் பாராட்டு

சப்னி அஹமட்-

க்கட்சியின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கு பிறகு இக் கட்சியின் தலைமையினை அமைச்சர் றஊப் ஹக்கீம் பாராமெடுத்து முதல் இன்று வரையும் சிறந்த முறையில் இந்த இயக்கத்தை செவ்வென முன்னெடுத்து வழிநடத்தி செயற்படுத்தி வருவதை யாவரும் அறிந்த விடயமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். 

கலாபூசணம் ஆசுகவி அன்புடின் எழுதிய தொப்புள் கொடியும் தலைப்பாகையும் கவிதை நுால் அறிமுக விழா அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்பாடசாலை கேட்போர் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹானீபா தலைமையில் கடந்த  09ஆம் திகதி  மாலை நடைபெற்ற போது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இக்கட்சியின் வளர்ச்சியைக் கண்டு தாங்க முடியாத சிலர் வெளிநாட்டுகளில் உள்ள டயேஸ் போராக்கள் நிதிகளை இவர்களுக்கு வழங்கி சதித்திட்டங்களைத் தீட்டி முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையும் இக்கட்சியினையும் அழிப்பதற்கான நடவடிக்கைகளிலும் இக் கட்சியில் இருந்து அதிகாரமற்ற துாரத்திலுள்ள மக்கள் ஆதரவு இல்லாத ஒரு கூட்டத்தினர் செயற்படுட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது ஒரு தேர்தல் வருகின்ற போது இவர்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளும் மக்களும் ஏயையவர்களும் தகுந்த படம் புகுட்டுவார்கள் பின்னர் கிழக்கின் எழுச்சி நிறைவடைந்து புஸ்வானமாக மாறிவிடும் என்பதைக் கூறிக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -