ஐ.தே.க. உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அவசரமாக அழைப்பு..!

ரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவில் (கோப்) அங்கத்துவம் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் இன்று (04) மாலை 5.00 மணிக்கு அலரி மாளிகைக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு நாளை (05) பிற்பகல் 2.30 மணிக்கு கோப் குழு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 07 ஆம் திகதி முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் கோப் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹதுன்னெத்தி அறிவித்திருந்தார்.

அர்ஜுனன் மஹேந்திரனின் நியமனத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாகு அதிகம் காணப்பட்டதனால், அவருக்கு எதிராக நடாத்தப்படவுள்ள விசாரணைகளை சிக்கலுக்குள்ளாக்கும் ஒரு சதி நடவடிக்கையாக இன்றைய திடீர் கூட்டம் இருக்கலாம் என அரசியல் மட்டத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -