கிழக்கு மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதில் ஜனாதிபதி அக்கறை - அக்கரைப்பற்று வைத்தியசாலையில் நசீர்

அபு அலா, சப்னி அஹமட் - 

ட்டிடம் திறந்து வைப்பதாலும், வைத்திய உபகரணங்கள் வழங்குவதாலும் வைத்திய சேவையை ஒரு போதும் வளர்ச்சியந்ததாக கருத முடியாது. அதற்காக வைத்தியர்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து பொதுமக்கள் சிறந்த சேவை செய்வதன் மூலமே சுகாதாரத்துறையை வளர்சியடைய வைக்க முடியும் என்று கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை பாராமரிப்பு, சமூக சேவைகள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் ஏல்.எல். முஹம்மட் நசீர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின் பற்சிச்சைக் கூடத்துடன் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பும், நோயாளர் விடுதித் தொகுதி திறக்கும் நிகழ்வும் இன்று (28) இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

அக்காரைப்பற்று பிரதேசத்திலயே இந்த வைத்தியசாலை பலம்பெறும் வைத்தியசாலையாகவும், மக்களுக்கு சிறந்து சேவையை வழங்கிவரும் வைத்தியசாலையாக காணப்படுகின்றது.

இந்த வைத்தியசாலைக்கான பிரச்சினைகள் தொடந்தேர்ச்சியாக காணப்பட்டதை எனது கவத்திற்கொண்ட பின்னர் இதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுத்த வேண்டும் என்பதற்காக எனது நிதியிலிருந்து முதற்கட்ட நடவடிக்கையாக பல் வைத்திய உபகரணங்களுக்காக 12 இலட்சமும், நோயாளர் விடுத்தித் தொகுதிக்காக 05 மில்லியனையும் ஒதுக்கீடு செய்துள்ளேன். 

கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதில் எமது நாட்டின் ஜனாதிபதியும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அதற்காக கிழக்கு மாகாண சுகாதாரத்துறையின் சேவையை மக்களுக்கு வழங்கு வேண்டும் என்ற நோக்கில் வழமையாக வழங்கப்படும் நிதியை விட இம்முறை 1000 மில்லியன் ரூபா கிடைக்பெற்றுள்ளது என உரையாற்றினார். 

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநாகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹனிபா மதனி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், கல்முனை பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -