மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு அகில இலங்கை ஹிந்து சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை அசாத் சாலி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அகில இலங்கை ஹிந்து சம்மேளனம் கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை ஹிந்து சம்மேளனம் மற்றும் பொதுபல சேனா அமைப்பு ஆகியன ஒன்றாக இணைந்து பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.