வடக்கு மாகாண பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்பு கோரி போராட்டம்..!

பாறுக் ஷிஹான்-
ரச வேலை வாய்ப்பை வழங்க கோரி வடக்கு மாகாண பட்டதாரிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை(23) அமைதி வழியிலான ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை பத்து மணியளவிலேயே மேற்படி போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் நூற்றுக்காணக்கான பட்டதாரிகள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை புதிய அரசிற்கு எதிராக வெளிப்படுத்தியிருந்தனர்.

வட மாகாணத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில், பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்ம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், தமது கோரிக்கைகள் மற்றும் வட மாகாணத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரமொன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தமது பிரச்சினைக்கு நல்லாட்சி அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில்; வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் செயற்பாடுகளாக கடந்த இரண்டு வருடங்களில் போராட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தோம். இதன் போது அதிகாரிகள் அனைவரும் வாய்மூலமான உறுதியளிப்புக்களை தந்திருந்த போதிலும், எழுத்துமூலமாக எதனையும் எம்மிடம் உறுதிகள் எதனையும் வழங்கவில்லை.

தொடர்ச்சியாக வேலை தருவோம் என கூறிக்கொண்டே எம்மை ஏமாற்றி வருகின்றனர். இருபத்தி மூயாயிரம் ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை க.பொ.த உயர்தர தகமையோடு உள்வாங்குவது கண்டனத்திற்கு உரியது. இந்த நாட்டில் இந்தளவிற்கு பட்டதாரிகள் வேலை வாய்ப்பற்று இருக்கும் போது அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க முடியும்.

எண்ணாயிரம் தகவல் தொடர்பு உத்தியோகஸ்தர்களை உள்வாங்க முடியும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதற்கான வர்த்தமானி அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. இதை முதலில் வெளியிடப்பட வேண்டும். அரசியல் செல்வாக்குகள் மூலம் தொண்டர் ஆசிரியர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரச நியமனம் வழங்குவதற்கு பதிலாக பட்டதாரிகளுக்கு வழங்க முடியும்.

தொண்டர் ஆசிரியர்களில் யுத்த காலத்தில் பணியாற்றிய, கஷ்ட பிரதேசத்தில் பணியாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கு அரச நியமனம் வழங்குவதற்கு எமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் எம்மையும் அரச சேவைக்குள் அரசு இணைத்து கொள்ள வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -