7 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நிந்தவூர் வைத்தியருக்கு பிணை..!

ஏ.ஜே.எம்.நவாஸ்- 
7 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சம்மாந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிந்தவூரைச் சேர்ந்த பிரபல வைத்தியர் ஒருவரை கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்வதற்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் கடந்த புதன் கிழமை (13.07.2016) அனுமதி வழங்கியது. சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் அவர்கள் குறித்த சந்தேக நபரை பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கினார்.

குறித்த சந்தேக நபர் சார்பில் தெரிபடுகின்ற சட்டத்தரணிகளான வை.எம்.அன்வர் சியாத், றக்கீப், தஸ்னீம் பானூ, றசீட், மற்றும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஏ.எம்.நசீல் அவர்கள் சேர்ந்து செவ்வாய்க்கிழமை 12.07.2016ம் திகதி சமர்ப்பித்த நகர்வு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போது அவர் சார்பில் சட்டத்தரணி றக்கீப் அவர்கள் சந்தேக நபர் சமூகத்தில் ஒரு உயர் தொழிற்றகமையுள்ளவர் என்றும் தொடர்ச்சியாக அவர் விளக்கமறியலில் இருந்து வருவதனால் கடும் மன அழுத்தங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உட்பட்டு இருப்பதனால் அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். 

அதனை நீதவான் பஸீல் அவர்கள் நிராகரித்த வேளையில் இடைநடுவே குறுக்கீடு செய்த சம்மாந்துறை பதில் நீதவானும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.நசீல் அவர்கள் சந்தேக நபருடைய பிள்ளைகள் தொடர்பான விண்ணப்பம் ஒன்றைச் செய்ய நீதிமன்றின் அனுமதியை வேண்டி நின்ற வேளையில் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்தது. 

இவ்விண்ணப்பத்தில் பிள்ளைகளினுடைய சட்டரீதியான பாதுகாவலனாக இந்நீதிமன்றம் இருப்பதனாலும் சந்தேக நபரின் மூத்தமகன் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பதனாலும் அவரின் எதிர்காலத்தையும் மற்றய பிள்ளைகள் பாடசாலைகளில் தற்சமயம் கல்வி கற்றுக் கொண்டிருப்பதனால் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்திற் கொள்ளுமாறு மன்றினை வேண்டிக் கொண்ட போது' மன்று அவ்விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதுடன் சந்தேக நபரை மறுநாள் புதன் கிழமை 13.07.2016ம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் அவர்கள் உத்தரவிட்டார்.

அதற்கமைய சந்தேக நபர் புதன் கிழமை மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவருடைய சார்பில் தெரிபடுகின்ற சட்டத்தரணிகள் மன்றின் முன் தோன்றி அவரின் பிணை தொடர்பிலான விண்ணப்பத்தை செய்த போது நீதவான் அதனை ஏற்றுக் கொண்டு குறித்த சந்தேக நபரை ரூபா ஒரு இலட்சம் ரொக்கப் பிணையிலும் ரூபா ஐந்து இலட்சம் இரு சரீர பிணையிலும் செல்லவதற்கு அனுமதித்த அதேவேளை பிணையாளிகளில் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தராக காணப்பட வேண்டும் என்பதுடன் 1ம் 3ம் ஞாயிற்றுக் கிழமைகளில் சம்மாந்துறைப் பொலிஸில் ஆஜராக வேண்டும் எனவும் சாட்சிகளுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் விடுக்கக்கூடாது என்ற அடிப்படையிலும்,

நீதவானின் கடும் எச்சரிக்கையுடனும் மிக நீண்ட நேர அறிவுரைகளுக்குமமையவும் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்லவும் நீதவான் பஸீல் அவர்கள் அனுமதி வழங்கியதுடன் மேலும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள முடியாதென்றும் கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அத்துடன் பிணையாளிகளின் நம்பகத்தன்மையையும் ஆராய்ந்த பின்னரே நீதவான் எச்.எம்.எம்.பஸீல் அவர்கள் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -