இன்று இரா.சம்பந்தன் பங்கேற்கும் மூ.கோவின் 50வது அகவை நூல்வெளியீட்டுவிழா!

காரைதீவு நிருபர் சகா-


மிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கும் மூ.கோவின் 50வது அகவை நூல் வெளியீட்டுவிழாஇன்று 30ஆம் திகதி களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ளது.

செட்டிபாளையம் சமூகமேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்பாரிய நிகழ்விற்கு கிழக்குமாகாண முன்பள்ளிகள் வாரியத் தலைவரும் அமைப்பின் தலைவருமான பொன்.செல்வநாயகம் தலைமைதாங்குகின்றார்.

இலங்கை நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரி கலாநிதி மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் 50வது அகவையையொட்டி அனாத்தமுகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் தொகுத்த அகவை 50 எனும் பாரிய நூலும் அங்கு வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இரா.சம்பந்தனுடன் பல அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் என 1000பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பெருவிழா களுவாஞ்சிக்குடி பற்றிக்கலோ ஹொலிடே றிசோட் இன் விடுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -