116 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 4 குழாய்க் கிணறுகள் அமைச்சர் ஹக்கிமினால் திறந்து வைப்பு..!

அபு அலா -
ம்பாறை, பொத்துவில் உல்லை பிரதேசத்தில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் 116 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 4 குழாய்க் கிணறுகள் மற்றும் அதற்கு தேவையான நீர்ப் பம்பிகள், நீர்க் குழாய்கள், நீர் உந்தும் நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 5 நீர் வடிகட்டிகள் போன்றவற்றை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம் இன்று (16) திறந்து வைத்தார்.

பொத்துவில் பிரதேச மக்களின் நலன் கருதி அமைச்சர் றஊப் ஹக்கீமினால் முன்னெடுக்கப்பட்ட இந்த 4 குழாய்க் கிணறுகளின் மூலம் ஒரு நாளைக்கு 2200 கனமீற்றர் நீரை பொத்துவில் பிரதேச மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த பொத்துவில் உல்லை நீர் வழங்கள் திட்டமானது மெரிக்கா அரசின் நிதியுதவியின் கீழ் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சுர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரீப் சம்சுதீன் உள்ளிட்ட மு.கா கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -