விஞ்ஞான துறை மாணவர்களுக்கும் வெளிவாரி கற்கைகளை வழங்கவேண்டும் தொண்டராசிரியர்களுக்கு நியாயம் வேண்டும் கல்வியல் கல்லூரி அனுமதி மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார் திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் நேற்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:
உலகில் எழுத வாசிக்க தெரிந்தோரை அதிகமாக கொண்ட நாடுகளுள் இலங்கையும் ஒன்று நமது கல்வி அபிவிருத்தியே இதற்கு காரணம் அந்த வகையில் நான் பெருமையடைகிறேன் வருடாந்தம் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுள் இருபது வீதத்துக்கும் குறைந்தவர்களே பல்கலைகழகத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர் இதனால் பெரும்பாலானோர் வாய்புகளின்றி இருக்கின்றனர்.
கலைத்துறை வர்த்தகத்துறையில் கற்றோர் வெளிவாரியாக பட்டங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றன ஆனால் விஞ்ஞான துறையில் கற்றோர் தாம் விரும்பிய பட்டங்களை வெளிவாரியாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நமது நாட்டில் குறைவாகவே காணப்படுகின்றது.வசதிவாய்புள்ளோர் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவத்துறை பட்டம் உட்பட பல்வேறு பட்டன்களை வெளிவாரியாக பெற்றுகொள்கின்றனர் ஆனால் வசதிகுறைந்தவர்களால் இவ்வாறு கற்க முடியாதுள்ளது.
எனவே இலங்கையில் மருத்துவத்துறை உட்பட விஞ்ஞான துறை சார்ந்த பட்ட கற்கைகளை வழங்குகின்ற வெளிவாரி நிறுவனங்களை தாபிக்க வேண்டிய நிலை அல்லது வெளிநாட்டு பல்கலைகழகங்களின் கிளைகளை இலங்கையில் தாபிக்க வேண்டிய நிலை குறித்து நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.
உயர்தர பரீட்சை சிலவேளைகளில் அதிஷ்ட பரீட்சையாக மாறிவிடுகின்றது பாடசாலை பரீட்சைகளில் திறமையை காட்டுகின்ற சிலர் உயர்தர பரீட்சையில் தோல்வி அடையும் நிலையை நாம் காண்கிறோம் இவ்வாறானவர்களுக்கு வெளிவாரி நிறுவனங்கள் மூலம் உதவ முடியும்.
பல்கலைகழகங்களை பொறுத்தவரை வசதிவாய்ப்புக்கள் இன்னும் பூரணமடையவில்லை என்றே கூற வேண்டும் எனவே காலத்துக்கு காலம் இவற்றின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவேண்டியுள்ளது.
கிழக்குமாகானத்தை பொறுத்தவரை கடந்தகாலங்களில் ஆசிரியர் தட்டுபாடு நிலவியது இதனை நிவர்த்திசெய்ய தொண்டராசிரியர்கள் பயன்படுத்தப்பட்டனர் எனினும் இவர்களில் சிலர் கைவிடப்பட்ட நிலை காணப்படுகிறது தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவைமுடிந்தபின்கைவிடுவது நல்லதல்ல எனவே இவர்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் பொருத்தமானவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை கடந்த காலங்களில் கல்வி அரசியல்மயப்பட்டுள்ளது அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் வலயக்கல்வி அலுவலகங்களிலும் ஆசிரியர் வள நிலையங்களிலும் தேவையில்லாமல் இணைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் காலையில் வந்து ஒப்பமிட்டுவிட்டு தமது சோந்த வேலைகளுக்கு செல்கின்றனர் பின்னர் மாலை மாலை வந்து மீள ஒப்பமிட்டுகொள்கின்றனர் சில அதிகாரிகளின் ஆசிர்வாதம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இருக்கின்றது இந்த நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும் கல்வி அமைச்சர் இது விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
கல்வி கல்லூரிகளுக்கு பயிலுனர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய நடைமுறை தற்போது பின்பற்றபடுகிறது அதாவது ஆசிரியர் வெற்றிடம் உள்ள பிரதேசங்களில் இருந்து மட்டுமே பயிலுனர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர் இது சில சிக்கல்களை தொற்றுவித்துள்ளதால் இப்புதிய நடைமுறை குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.
கிழக்குமாகனத்தைப் பொறுத்தவரை சில வலயகல்வி அலுவலகப்பிரிவில் ஆசிரியர்கள் போதுமளவு இருந்தால் அவ்வலயத்தின் கீழ் வரும் எல்லாபிரதேசங்களிலும் ஆசிரியர்கள் போதுமானளவு இருப்பதாக கருதப்பட்டு அங்கு பயிலுனர் தெரிவு போதுமானளவு இடம்பெறாமல் உள்ளது
ஆனால் சில வலயங்களில் இருந்து சில பிரதேசங்களுக்கு ஆசிரியர் சரியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை இதனால் இவை பாதிக்கப்பட்டுள்ளன உதாரணமாக திருகோணமலை வலயகல்வி அலுவலக பிரிவில் ஆசிரியர்கள் போதுமானளவு இருக்கின்றனர் ஆனால் அவ்வலயத்தில் ஆசிரியர்கள் சரியாக பகிர்ந்தளிக்கப்படாததால் அதன் கீழ்வரும் குச்சவெளி பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது.
ஆனால் கல்வியல்கல்லூரி பயிலுனர் தெரிவின்போதுகுச்சவெளி ஆசிரியர் வளமுள்ள பகுதியாக பார்க்கப்பட்டுள்ளது அங்கு பற்றாக்குறை இருந்தும் தகுதியானவர்கள் இருந்தும் மிகக்குறைந்த தொகையினரே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் இது இப்பிரதேசத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் இதுபோன்ற பல பிரதேசங்களை உதாரணத்துக்கு கூற முடியும் தம்பலகாம பிரதேசத்தை எடுத்துகொண்டால் அங்குள்ள தமிழ் பாடசாலைகள் திருகோணமலை கல்வி வலையத்தின் கீழும் முஸ்லிம் பாடசாலைகள் கிண்ணியா கல்வி வலையத்தின் கீழும் சிங்கள பாடசாலைகள் கந்தளாய் கல்விவலையத்தின் கீழும் உள்வாங்கப்பட்டுள்ள இங்கு அதிகமான ஆசிரியர் பற்றாக்குறையுள்ளது ஆனால் பயிலுனர் தெரிவு குறைவாக இடம்பெற்றுள்ளது எனவே இங்கு ஏதோ பிழை நடந்துள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.
எனவே சில அதிகாரிகளின் தவறான கணக்கீடுகளால் பலபிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவைகுறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கிண்ணியா கல்வி வலயத்தில் அதிபர் இடமாற்றங்கள் சுற்றறிக்கைக்கு அமைய இடம்பெறுவதில்லை சில அதிகாரிகளின் விருப்பு வெறுப்புக்கு அமையவே இடம்பெறுகின்றன இதனால் தொடர்ச்சியாக இருவது வருடங்கள் ஒரே பாடசாலையில் அதிபராக கடமையாற்றுவோர் இருக்கின்றனர்.
இதுகுறித்து கிழக்குமாகாண சபை உறுப்பினராக இருந்தபோது கடந்த 2013 ஆம் ஆண்டு நான் மாகாண சபாயில் கேள்வி எழுப்பினேன் எல்லாம் சீர்செய்வதாக கூறப்பட்டது எனினும் இதுவரை எதுவும் நடக்கவில்லை கிழக்குமாகாணமும் திருகோணமலையும் கல்வியில் பின்தங்குவதற்கு இதுபோன்ற முறைகேடுகளே பிரதான காரணம் இதுப்போன்ற குறைபாடுகளை நிவர்திசெய்யமல் நாம் கல்வியில் முன்னேற்றம் காண முடியாது.
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் கல்வியில் சரியான மேற்பார்வை இடம்பெறாத குறைபாடுகளை அவதானிக்க முடிகிறது மாகாண கல்விதினைக்கலத்தால் வலயகல்வி அலுவலகங்கள் சரியாக மேற்பார்வை செய்யப்படுவதில்லை வலயகல்வி அலுவலகங்களால் பாடசாலைகள் சரியாக மேற்பார்வை செய்யப்படுவதில்லை பாடசாலை அதிபர்களால் ஆசிரியர்கள் சரியாக மேற்பார்வை செய்யப்படுவதில்லை.
தகுதியானவர்கள் தகுதியான பதவிக்கு உரிய முறைப்படி நியமிக்கப்படாமை இதற்கு காரணமாகும் சிலவேளை மேற்பார்வை செய்பவர்களை விட மேற்பார்வை செய்யப்படுபவர்கள் தகுதி கூடியவர்களாக இருந்துவிடுகின்றனர்.
இவ்வாறான குறைபாடுகளால் தங்களை திருத்தி சரியான முறையில் இயங்கமுடியாத நிலை ஆசிரியர்கள் அதிபர்கள் அதிகாரிகளுக்கு உள்ளது.
அண்மைக்கால பெறுபேறுகளை பார்க்கும்போது திருகோணமலை மாவட்டம் பின்னடைந்திருப்பது தெரிகிறது எனவே இந்த விடயத்தை கௌரவ அமைச்சர் அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகப்பிரிவு.