ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் சுகாதார தொண்டர்களாக கடமை புரிந்த தமிழ் முஸ்லிம் சிங்கள தொண்டர்களை நிரந்தரமாக்க கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரினால் தனி நபர் பிரேரணை 21.06.2016 ம் திகதி செவ்வாய் கிழமை மாதாந்த கிழக்கு மாகாண சபை அமர்வின்போது பேசப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ நசீரினால் பதில் அளிக்கபட்டது.
அதே போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள கடமை நிறைவேற்று அதிபர்களை நிரந்தரமாக்க கோரி குறித்த சபை அமர்வின் பொழுது மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால் முன் வைக்கபட்ட பிரேரணையும் சபை ஏகமனதாக உரிய மத்திய அமைச்சுக்கு கடித மூலம் தெரிவிக்க சபையின் தவிசாளர் கலபதியினால் அறிவிக்கபட்டது.
அத்தோடு மகாண சபை உறுப்பினர் அன்வரின் குறித்த இரண்டு தனி நபர் பிரேரணைகளுடைய உரைகளின் காணொளி இங்கே வசாகர்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.