அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-மூதூர் ஹபீப் நகர் உமர் பாறூக் வித்தியாலயத்தில் இரண்டு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (02) கல்லூரியின் வளாகத்தில் அதிபர் எஸ்எம். கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லாகீர் , பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் ஆகியோர்களோடு இணைந்து மூதூர் கல்விப் பணிமனையின் பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.தாரீக் மற்றும் அதிகாரிகளும் பெற்றோர்களும்,ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகீர் உரையாற்றுகையில் பாடசாலைக்கான மாடிக்கட்டிடத்தினை கி.மா.முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியின் மேற்பார்வையில் கி.மா.சபையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கு என்னுடைய முழுமையான பங்களிப்பினையும் செய்திருக்கின்றேன்.
அத்தோடு இக் கட்டிடத்தை பெறுவதற்க்காக ஒத்துழைத்த மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.நிசாம்,பிரதி திட்ட பணிப்பாளார் எம்.உவைஸ், மூதூர் கல்விப் பணிமனையின் முன்னால் கல்விப் பணிப்பாளர் அகிலா , தற்போதைய மூதூர் கல்விப் பணிமனையின் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.மன்சூர் ,கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேகுணவர்த்தன மற்றும்
இவ்விழாவிற்க்கு வருகை தந்த பா-உ இம்ரான் மஹ்ருப் ஆகிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு இப்பகுதியின் பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் அத்தியாவசியமானது அதிலும் இப்பாடசாலைக்கு மிகவும் அவசியமானது.