வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள எல்லாக் காணிகளை ஒப்படைக்க முடியாது -பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

டக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள எல்லாக் காணிகளையும் விடுவிப்பது சாத்தியமற்றது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று காங்கேசன்துறையில் இடம்பெற்ற காணி விடுவிப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

முப்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இன்று காணிகள் விடுவிக்கப்பட்டதைப்போன்று இன்னும் சில தினங்களிலும் சில காணிகளை விடுவிக்கவுள்ளோம். விடுவிக்கப்படுவதற்கு ஏதுவான காணிகளை அடையாளம் கண்டு தொடர்ச்சியாக அதை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்கு நீண்ட நாட்கள் ஆகாது என நான் நினைக்கின்றேன்.

பாதுகாப்பின் நிமித்தம் சில காணிகளை விடுவிப்பது சாத்தியமற்றது. எத்தனை ஏக்கர் அவ்வாறு விடுவிக்க முடியாமல் போகும் என்பது குறித்து இன்று என்னால் கூறமுடியாது. 

அவ்வாறான காணிகளின் உரிமையாளர்களிற்கான இழப்பீடுகள் நிச்சயம் வழங்கப்படும். யாழ் மாவட்டத்தில் ஒருகாலத்தில் 29ஆயிரம் ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிம் இருந்தது.

ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை விடுவிக்கப்பட்டு மூவாயிரம் ஏக்கர் காணிகளே இன்று விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே பாதுகாப்பு தேவைகளை தவிர்த்து ஏனைய சகல காணிகளையும் விடுவிக்க நாம் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுப்போம் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -