அப்துல்சலாம் யாசீம், ஹைதர் அலி-
கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்திகளுக்கு மத்திய அரசின் மூலம் நிதி ஒதுக்குவது சம்பந்தமான கலந்தரையாடல் நேற்று (6) திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா தள வைதியசாலைக்கு 2414 மில்லியன் ரூபாவும், மூதூர் தள வைத்தியசாலைக்கு 1280 மில்லியன் ரூபாவும், தோப்பூர் பிரதேச வைத்தியசாலை 435.5 மில்லியன் ரூபாவும் மற்றும் புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு 605 மில்லியன் ரூபா (61.5 கோடி) நிதி ஒதுக்கீடும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குச்சவெளி பிரதேச வைத்தியசாலை, கோமரன் கடவல வைத்தியசாலை, பதவி ஸ்ரீ புர வைத்தியசாலை மற்றும் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைகளுக்கான மதிப்பீடுகளை அவசரமாக தயாரிக்கும்படி அமைச்சரினால் பணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுக்க இன்னும் சில தினங்களில் அவைகளுக்கான வேலைத்திட்டங்கள் முடிக்கபட்டு ஒப்படைக்கப்படும் என பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரினால் பதில் அளிக்கபட்டதோடு, குறித்த வைத்தியசாலைகளுக்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிதி ஒதுக்கீட்டினை மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து நடை முறைப்படுத்தும் கலந்துரையாடல் 06.06.2016ஆம் திகதி காலை 10 மணியளவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுகாதார பணிமனையின் கேட்போர்கூடத்தில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் மற்றும் லாகிர் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. கருணாகரன் பணிப்பாளர் திரு. முருகானந்தம் கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு பிராந்திய பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணக்காளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு வேலைத்திட்டங்களை உடன் அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டன.
புல்மோட்டை பிரதேச வைத்தியசாலைக்கான நிதி ஒதுக்கீடுகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் வேண்டுகோளின் அடிப்படையில் அமைச்சரின் வருகையின்போது முன்வைக்கபட்டதோடுஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கான வேண்டுகோள்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், லாகிர் மற்றும் முன்னாள் தவிசாளர் எச்.எம். பாயிஸ் ஆகியோரால் முன்வைக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே தனது வேண்டுகோள்களை ஏற்று நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்ட பிரதி அமைச்சர் பைசல் காசீம் அவர்களுக்கு மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெவிவித்து கொண்டார்.
இதில் மத்திய பிரதி சுகாதர அமைச்சர் பைஸல் காசிம்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்.எம்.அன்வர், ஜே.எம்.லாஹிர், பிரதமச் செயலாளர் டி.எம்.சரத் அபய குணவர்தன முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் மற்றும் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசகருமான சட்டத்தரணி ஜே.எம்.லாகீர் உரையாற்றுகையில் மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கும் அதிகாரிகளான உங்களுக்கும் இடையில் நல்ல உணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் இந்த மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும்
மத்திய அரசின் சுகாதார அமைச்சரான .ராஜித சேனாரத்ன அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அமைச்சர் இந்த அமைச்சின் கீழாக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசீம் அவர்கள் இருகின்றார்கள்.
பிரதி அமைச்சர் பதவியேற்ற பின்னர் திருகோணமலை மாவட்ட விஜயத்தின் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ நஸீர் வைத்திய அதிகாரிகள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் இங்குள்ள அனைவரும் வைத்தியசாலைகளுக்கு நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து அறிக்கைகளாக பெற்று அதிலுள்ள தடைகளை நாங்கள் மிகவும் நுட்பமாக பேசித்தீர்க்க வேண்டிய தேவை இருக்கிற நிலையில் ௦6 மாதங்கள் கடந்து விட்டது.
இனி மேலும் கால தாமதம் இன்றி செயற்படவேண்டும். அறிக்கைகளாக தயார் செய்யப்பட்ட நிலையில் இருகின்ற ஆவணங்களை பயன்படுத்தி அரச அதிகாரிகளாகிய நீங்கள் வினைத்திறனோடு செயற்பட்டு அரசியல் பிரமுகர்களாகிய நாங்களும் உங்களுடன் இணைந்து இந்த மாகாணத்தின் சுகாதாரத்தை கட்டியெழுப்பி நோயற்ற மாகாணமாகவும் -சுகாதாரத்தில் வளமுள்ள மாகாணமாகவும் கட்டியெழுப்புவோம் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .நஸீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்..அன்வர் பிரதி பிரதம செயலாளர்- சுகாதார பணிப்பாளர்- கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்- உதவிச்செயலாளர் -பிராந்திய பணிப்பாளார்கள்-திட்டமிடல் வைத்திய அதிகாரிகள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் அனைவருக்கும் மாகாணப் பிரதிநிதி என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்