வாகனம் கொள்வனவு செய்ததை அரசு நிரூபித்தால் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்கலாக 30 அமைச்சர்களுக்காக 118 கோடியே 25 இலட்சம் ரூபா கோரி, நேற்று பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீட்டு செலவு தொகை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரையில் வாகன கொள்வனவு தொடர்பில் அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் கொள்வனவு தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.