எம்.வை.அமீர்-
பல ஆண்டுகளாக நல்ல உற்பத்திகளை மக்களுக்கு வழங்கி மக்களது மனங்களில் தங்களுக்கு என தனி இடத்தைக் கொண்டுள்ள மேக்சன்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், பல்வேறு சமய அனூஸ்ட்டானங்களிலும் தங்களது பங்களிப்பை வழங்கி அந்தந்த சமய மக்களது மனங்களிலும் இடம்பிடித்துள்ளது.
அந்த வகையில் 2016-06-23 ஆம் திகதியன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் பாரிய இப்தார் நிகழ்வு ஒன்றினை நடத்தியது. நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.எச்.யாக்கூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக நிறுவனத்தின் முகாமையாளர்களான இர்ஷாத் மர்சூக், நிரோஷன் டி சில்வா மற்றும் ரமேஷ் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறுவனத்தின் விற்பனையாளர்கள் பாவனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் அஷ் ஷெய்க் மின்ஹாஜ் (உஸ்மானி) அவர்கள் றமழான் சிந்தனையை வழங்கினார்.