ஆசான் அருட்சகோதரர் மத்தியூவின் மரணச் செய்தி கேட்டு கவலையடைந்தேன் - ஹரீஸ் எம்.பி

ஏ.எல்.எம்.ஸிளாஸ்-
ல்முனை கார்மல் பத்திமா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் எனது ஆசானுமாகிய அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ அவர்களின் மரணச் செய்தியை கேள்வியுற்று கவலையடைகின்றேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் அனுதாபச் செய்தியில் குறிப்பிடுகையில்,

எனது பாடசாலை காலத்தில் ஆசான் அமரர் அருட்சகோதரர் மத்தியூ என்னை வழி நடாத்திய விதம், கற்றுக்கொடுத்த ஒழுக்கம், கல்வியில் ஆர்வத்தை தூண்டிய விதம் இன்னும் என்னால் மறக்க முடியாத நினைவுகளாக என் மனதில் இன்றும் நிறைந்துள்ளது.

இவ்வாறான ஒரு ஆசான் ஒவ்வொரு மாணவனும் கிடைக்கப்பெற்றால் அம்மாணவன் கல்வியிலும், வாழ்விலும் முன்னேற்றம் காண்பான் என்பதில் ஐயமில்லை. அவ்வாறான இடத்தினை எனது ஆசான் அமரர் மத்தியூ எனக்கு ஏற்படுத்தித் கொடுத்தார்.

அவர் கற்றுக்கொடுத்த ஒழுக்கப் பண்புகள் இன்று என்னை கல்வியிலும் அரசியலிலும் உயர்தியுள்ளது. அன்னாரின் ஆளுமை, சிறந்த தலைமைத்துவம், பேச்சு வல்லமை, பணிவு, அவரின் முயற்சி என்பவற்றால் கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி பல்வேறு துறைகளில் புகழடைந்தது.

என்னால் மறக்க முடியாத எனது ஆசான் அமரர் அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ அவர்களை இழந்து தவிர்க்கும் அன்னாரின் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -