ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் திறந்து வைத்தல் மற்றும் பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (03) அல்-ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய நுழைவாயிலினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கல்முனைப் பிராந்திய பிரதம மின் பொறியியளாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் மற்றும் உயர் அதிகாரிகளும் மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பரீட்சையில் திறமைகாட்டிய மாணவர்கள் அதிதிகளினால்கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.