ஏ.எல்.எம்.ஸினாஸ்-
மருதமுனை மக்பூலியா வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த வீதியை பயன்பன்தும் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதர் நோக்கி வருகின்றனர். போக்குவரத்துக்கு ஏற்ப உகந்த முறையில் இந்த வீதியை அபிவிருத்தி செய்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மருதமுனை மக்பூலியா வீதி பொதுமக்கள் நேரிசலாக வாழும் வீதி யாகும். மக்பூலியா ஜூம்ஆ பள்ளிவாசல், சோனகர் சங்கத்தின் வாசிகசாலை, உதவும் குரல்கள் மருத்துவ ஆலோசனை நிலையம் போன்றன இந்த வீதியிலேயே அமைந்துள்ளது. இந்த வீதியை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், வாகன சாரதிகள் நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.
900 மீற்றர் தூரத்தை கொண்ட இந்த வீதியில் இடையிடையே கொங்கிரீட் விதிகளும் சில துண்டுகளாக போடப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் காலப் பகுதிகளில் மக்பூலியா வீதியை பயன்படுத்த முடியாமல் உள்ளது.
கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியிலிருந்து கிழக்குப் பக்கமாக கடற்கரை நோக்கிச் செல்லும் பிரதான வீதியே இதுவாகும். வீதியின் முகப்பு தோற்றத்தில் 80 மீற்றர் நீளத்துக்கு பழமை வாய்ந்த வடிகான் வசதி காணப்படுகிறது. இதில் மிக நீண்ட காலமாக மூடப்படாமல் பாரிய குழி ஒன்றும் உள்ளது. இதனால் குறித்த இந்த வீதியை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மாற்று வீதியையே பன்படுத்தி விருகின்றனர்.
கல்முனை மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் உள்ள வடிகாணை பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்ற முறையில் துப்பரவு செய்து, அபிவிருத்தி செய்து தருவதுடன் விரைவில் மருதமுனை மக்பூலியா வீதியையும் அபிபிருத்தி செய்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.