புத்தளம் நிருபர் -
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி க.பொ.த. சாதாரண தர 2014 மாணவர் குழுவான புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பெறவியையினால்
சேகரிக்கப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் கொழும்பு 12 வாழைத்தோட்ட அல் ஹிக்மா கல்லூரிக்கு கையளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீனின் ஏற்பாட்டில் அல் ஹிக்மா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த அப்பியாசக் கொப்பிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 163 அல் ஹிக்மா கல்லூரி மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி உப அதிபர் எஸ்.டீ.எம்.நெளஸாத் மரைக்கார் புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவையின் பொறுப்பாசிரியர் ஜே.இஸட்.ஏ. நமாஸ்
தலைமையில் சென்ற புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவையின் உறுப்பினர்கள் அப்பியாசக் கொப்பிகளை வாழைத்தோட்டம் அல் ஹிக்மா கல்லூரியில் வைத்து கல்லூரி அதிபரிடம் கையளித்தனர்.
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி உப அதிபர் நெளஸாத் மரைக்கார் வாழைத்தோட்டம் அல் ஹிக்மா கல்லூரி அதிபர் கே.எம்.எம். நாளிர் மற்றும் உப அதிபர் யூ.எல்.எம். இஸ்மாயில் ஆகியோரிடமும் புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவையின் தலைவர் ஆர்.எம்.எம்.ஸஜாத் உப தலைவர் எம்.ஜே.எம். முபாரிஸ் ஆகியோர் அல் ஹிக்மா கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் ஆகியோரிடம் அப்பியாசக் கொப்பிகளை கையளிப்பதை படத்தில் காணலாம்.