அஷ்ரப் ஏ சமத்-
ரோயல் கல்லுாாியின் நீச்சத்தடாகத்தில் விழுந்து பாதிக்கப்பட்ட மாணவன் வீடொன்று இல்லாமல் வாழ்ந்த சசிந்த அல்விசின் குடும்பத்தினருக்கு கடந்த வாரம் பிரதமரினால் மருதானையில் வீடொன்று வழங்கப்பட்டது.
இன்று (9) ஆம் திகதி சுபமூஹூா்தத்தில் அம்ம்மாணவனையும் அவனது தாய் , சகோதரியையும் அவ் வீட்டில் குடியேறினாா். இவ் வைபவத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவும் கலந்து சிறப்பித்தாா்.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சா் சஜித் பிரேமதாச -
இம் மாணவன் தனது தந்தையை இழந்தவன். அத்துடன் கடந்த 3 வருடங்களாக நோய் வாய்பட்டு பேச முடியாமல் உள்ளான். இம்மாணவன் ரோயல் கல்லுாாியின் நீச்சத்தடாகத்தில் விழுந்து மூச்சுத்தினறி சுயநினவில்லாமல் உள்ளாா். ஆனால் இம் மாணவனும் இவரது தாய் சகோதரிகள் வாழ்வதற்கு வீடொன்று இல்லாமல் கொள்ளுப்பிட்டியின் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளனா் .
அவ் வீடும் பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை செலுத்திய நஸ்ட ஈடும் இ்ம் மாணவணின் தந்தையின் சகோதரா்களுக்கே செலுத்தப்பட்டுள்ளது. காரணம் இவ் வீட்டின் உறுதிப்பத்திரமும் கூட வேறு ஒருவருக்குச் சொந்தமாகும். இந்த தகவல்களையெல்லாம் ஊடகங்கள் வெளிக் கொண்டுவந்தன. . அதற்காக ஊடகங்களுக்கு தனது நன்றியையும் அமைச்சா் சஜித் தெரித்தாா்.
அத்துடன் கடந்த வாரம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் இம் மாணவனுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் உறுதிப்பத்திரம் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் வீட்டின் பெறுமதி 37 இலட்சம் ருபாவாகும். இவ் வீட்டினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அ்திகார சபை வழங்கியுள்ளது.