ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கிலுள்ள சிரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஐ.எஸ். தலைமையகத்துக்கு வந்த போது அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் பாக்தாதியும் ஐ.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலரும் காயமடைந்ததாக உள்ளூரில் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக ஈராக்கின் அல் சுமேரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும், இந்த தகவலை தற்போது உறுதிப்படுத்த முடியாது என கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பாக்தாத், ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதேவேளை, ஐ.எஸ் அமைப்பினர் அதிகம் உள்ள சிரியாவின் ராக்கா நகரில் நடைபெற்ற தாக்குதலில் அவர் பலியானதாகவும் கூறப்படுகிறது.
இத்தகவலை ஈரானிய அரசாங்க செய்தி ஊடகம் மற்றும் அரச சார்பு துருக்கி பத்திரிகையுமான யெனிஸ் சபக்கும், அரபு செய்தி நிறுவனமான அல் அமக்கை மேற்கோள் காட்டி இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ஈராக்கின் சமாரா நகரில் 1971 ஆம் ஆண்டு பிறந்த அபுபக்கர் அல் பக்தாதி, ஐ.எஸ். அமைப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் , அல்கெய்தா உட்பட இஸ்லாமிய போராட்ட அமைப்புக்கள் பலவற்றில் செயற்பட்டுள்ளார் என்பதாக கூறப்படுகின்றது.
Source : world news