எம்.ரீ.ஹைதர் அலி-
அண்மையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாளங்குடாவில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது ஆசிரியர்களிடம் பாடசாலையின் குறைகளையும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் கேட்டறிந்தது கொண்டதோடு, அவற்றை விரைவில் நிவர்த்தி செய்ய தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் வாக்குறுதியளித்தார்.
இதன்போது அரசினால் வழங்கப்பட்ட சீருடைத் துணியைத் தைத்து அணிவதற்கு கூட வசதியற்ற நிலையில் மாணவர்கள் அப்பாடசாலையில் கல்வி கற்பதாக அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் அம்மாணவர்களுக்கான உடைகளை தனது சொந்த நிதியிலிருந்து தைத்துக் கொடுப்பதாக பொறுப்பேற்றதுடன் அச்சீருடைகளை தனது தனிப்பட்ட செலவில் தைத்து அம்மாணவர்களிடம் கையளித்தார்.
இதன்போது அங்கு கலந்து கொண்ட அம்மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.