கொஸ்கம சாலாவ ஆயுதக்களஞ்சியசாலை தீ விபத்து - மஸ்தான் எம்.பி. நேரடி விஜயம்

பாறுக் ஷிஹான்-
கொஸ்கம சாலாவ இராணுவ முகாம்ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்ப்பட்ட தீ விபத்தினால் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல பகுதிக்கு விஜயம் செய்த அவர்அங்குள்ள மக்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அத்துடன் குமாரிமுல்ல பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அப்பகுதியிலுள்ள நீரை குடிநீர்த்தேவைக்கு பயன்படுத்தவேண்டாமென வைத்திய அதிகாரிகளால் அறிவுருத்தப்பட்டிருப்பதாக தெரிவித்ததையடுத்து உடனடியாக தனது சொந்த செலவில் அம்மக்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக 250 குடும்பங்களுக்கு 5லீற்றர் விகிதம் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.

குறித்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு பூகொட பெப்பிலிவெல மஹாவிஹாரையில் தங்கியிருந்த மக்களை பார்வையிட்டதுடன் விஹாரையின் தலைவரான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பிரதியமைச்சர் துலிப் விஜய சேகரவுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், அந்த மக்களுக்கான உடனடி தேவைகள் ஏற்ப்படும்போது தான் உதவுவதாகவும் வாக்குருதியளித்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -