ஹாசிப் யாஸீன்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் இப்தார் நிகழ்வு எதிர்வரும்ஞாயிற்றுக்கிழமை (12) 5.00 மணிக்கு சாய்ந்மருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில்இடம்பெறவுள்ளதாக போரத்தின் செயலாளர் எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபைஉறுப்பினர்கள், அரச திணைக்களத் தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள்உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதானிகள்,சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் அவர்தெரிவித்தார்.
இதன்போது போரத்தின் உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் மற்றும்உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய ஊடக கைநூல் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. மேலும் இவ் இப்தார் நிகழ்வில் விசேட பயான் துஆப் பிரார்த்தனைமற்றும் இராப்போசனம் என்பன இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர் எம்.சஹாப்தீன்மேலும் தெரிவித்தார்.