எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (17) வெள்ளிக்கிழமை கழகத் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கழகத்தின் செயலாளர் எஸ்.ரி.எம். பஸ்வாகின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ. கப்பார் மற்றும் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுக் கழகங்களின் உயர்பீட உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு றமழானின் சிறப்பு என்ற தலைப்பில் மௌலவி நௌபர் விசேட உரையாற்றினார்.