ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் அசமந்தப் போக்கு: உடன் நடவடிக்கை எடுக்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர்

க.கிஷாந்தன்-
ட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாகவும் மிகவும் மோசமாகவும் இருப்பதாகவும் கல்லூரி வளாகம் காடுமன்டிய நிலையிலும் இருக்கின்றது. இது நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை (03.06.2016) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரிக்கு விஜயம் செய்தார். அங்கு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கின்ற முகமாகவும் தொடர்ச்சியாக மாணவர்களினதும் நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்களின் முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கும் இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..

மலையக மாணவர்களுகாக விசேடமாக ஆரம்பிக்கப்பட்ட ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியின் நிலைமையை பார்க்கின்றபொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இலங்கையில் இருக்கின்ற கல்லூரிகளில் இயற்கை அழகையும் அதிகமான இடப்பரப்பையும் கொண்ட ஒரு இடமாக இந்த கல்லூரியிருந்தாலும் இதன் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. அதற்கு முழுமையான பொறுப்பை அந்த நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன்போது நான் நேரில் கண்ட விடயங்கள் என்னை வெகுவாக பாதித்துள்ளது.

குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவின் தரம் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மரக்களிகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. சமயல் அறை வெளிச்சம் இல்லாமலும் அசுத்தமாகவும் இருக்கின்றது. அரசாங்கம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தற்பொழுது பாரிய நிதியை கல்விக்காக ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த நிதியை முறையாகவும் நேர்மையாகவும் பயன்படுத்தப்படுகின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

அது மட்டுமல்லாமல் மாணவர்கள் பல குறைபாடுகளை என்னிடம் நேரில் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த மாணவர்களுக்கு நிர்வாகம் ஏதும் தடைகளை எற்படுத்துமாக இருந்தால் அவர்கள் என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம். அதற்கு நாங்கள் இடமளிக்கமாடடோம். மேலும் அங்கிருக்கின்ற குறைபாடுகளை மாணவர்கள் எங்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். அதற்கு அவர்களுக்கு முழுமையாக உரிமை இருக்கின்றது. ஏனெனில் இந்த கல்லூரியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கே இருக்கின்றது.

அதிகாரிகள் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் ஒய்வு பெற்று சென்றுவிடுவார்கள். இந்த கல்லூரியின் வளாகம் காடு மண்டிய நிலையிலும் நீண்ட நாட்களாக துப்பரவு செய்யப்படாமலும் இருப்பதை காணமுடிகின்றது. நிர்வாகம் இன்னும் அக்கரையாக செயற்பட வேண்டும்.

ஏனோதானோ என்ற நிலையில் செயற்பட முடியாது.அவர்களுக்கு முழுமையான பொறுப்பு இருக்கின்றது. ஏனைய கல்லூரிகளின் நிலை இவ்வளவு மோசமாக இல்லை. இங்கு இருக்கின்ற மாணவர்களும் கல்லூரியின் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். இது உங்களுடைய சொத்தாக நீங்கள் கருத வேண்டும்.

ஏனெனில் எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் அல்லது சகோதரிகள் இங்கு வந்து கல்விகற்க நேரிடலாம். அதற்காக இதனை நீங்கள் பாதுகாக்க வேண்டும். இங்கு நடக்கின்ற இந்த விடயங்கள் தொடர்பாக மிகவிரைவில் உரிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரவித்துள்ளார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -