நேற்று புதன்கிழமை (29) இரவு கிண்ணியா மணியரசன்குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வரும் போதே யானை தாக்கியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்ணியா பிரதேசத்தில் யானைத் தாக்குதலுக்கிலக்காகி அப்துல் மஜீட் மரணம் -படம் இணைப்பு
எப்.முபாரக்-
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் யானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலியாகியுள்ளார். கிண்ணியா புள்ளகுழிமணல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீத் ரகீப்(பொக்கையன்) வயது 36 என்பவரே பலியாகியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...