வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடனும் வறிய மாணவர்களின் கல்வி சார்ந்த விடயங்களிலும் இன, மத பேதமின்றி அக்கரையும் கரிசனையும் காட்டி வரும் அரசியல்வாதி என்றால் அது பொறியியலாளர் சிப்லி பாறுக் என நாம் வர்ணிக்கும் அளவுக்கு அவரின் செயற்பாடுகள் மேலோங்கி நிற்கின்றது.
ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதிகளை மாத்திரம் வைத்து தனது சேவையினை வழங்காது தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறுபட்ட பணிகளை மக்களுக்கு தனது சமூக சேவையாக ஆற்றிவரும் ஓர் சமூக சேவகனாகவும் பொறியியலாளர் சிப்லி பாறுக் காணப்படுகின்றார்.
அந்த வகையில் விசேட தேவையுடையவராக இருந்தும் கணனித்துறை சார்ந்த கல்வியினை கற்று வீட்டில் கணனி மூலம் அச்சு இயந்திர வேலைகளை மேற்கொண்டு தனது குடும்பத்தினை பராமரித்து வரும் ஓர் இளைஞன் ஒருவருக்கு தனது வேலைத்தளத்தினை அதிகரித்து கொள்வதற்கும் அவரின் சுயதொழிலை ஊக்குவிப்பதற்காகவும் அவரின் வேண்டுகோளுக்கமைவாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுகினால் CPU வழங்கப்பட்டது.
2016.06.14ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) இளைஞனின் வீடு நாடிச்சென்ற மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அந்த இளைஞனிடம் அதனை கையளித்தார்.