மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் தற்காலிக அதிபராக எம்.ஏ.எம்.இனாமுல்லா நியமனம்...!

பி.எம்.எம்.ஏ.காதர்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிப்புரையில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிக்கு தற்காலிக அதிபராக புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் அதிபராக் கடமையாற்றிய எம்.ஏ.எம்.இனாமுல்லா 2016.06.03ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேயவர்தன வினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கடந்த இரண்டு வருடங்களாக அதிபராகக் கடமையாற்றிய எம்.எம்.ஹிர்பஹான் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இணைந்து கொள்ளுமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேயவர்தன வினால் பணிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் அல்மனாரில் ஆசிரியராகவும்,பகுதித் தலைவராகவும், உதவி அதிபராகவும்,பிரதி அதிபராகவும் கடமையாற்றி 2014.06.01ஆம் திகதி அல்மனாரின் அதிபராகக் கடமையேற்று பாடசாலையை சிறப்பாக வழிநடாத்தி வந்த நிலையில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.

எந்த வித குற்றங்களும் இழைக்காத நிலையில் அதிபர் ஹிர்பஹான் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பில் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர் இந்த இடமாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் முன்னின்று செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப்,ஆசிரிய ஆலோசகர் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் ஆகியோர் முன்னிலையில் பாடசாலையின் பொறுப்புக்கள் அனைத்தையும் செவ்வாய்கிழமை (07-06-2016) புதிய தற்காலிக அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லாவிடம் ஒப்படைத்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -