றிஸ்லி-
இன்று 2016.06.15 வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனின் ஏற்பாட்டில் அன்னாரின் கட்சிக் காரியாலயத்தில் வைத்து மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர்.
குறிப்பாக: வீடு, வேலைகள் அற்ற இளைஞர்கள் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தந்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களிடம் வேண்டிக் கொண்டனர்.
இதன்போது கொண்டச்சி கிராமத்திலுள்ள விவசாயி ஒருவருவரின் சுய தொழிலை ஊக்குவிப்பதற்காக வீட்டுத்தோட்டம் மேற்கொள்வதற்கான நீர் பம்பி ஒன்றை வழங்கி வைத்து அவரின் வறுமையை போக்க தன்னாலான உதவியினை செய்து அனுப்பிவைத்தார்.