கொழும்பு – அவிசாவளை வீதியின் சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீதியை மறித்து மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்த நிலையில், மீளத் திறக்கப்பட்ட இந்த வீதிக்கு முன்பாக நேற்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வீதியை திறக்கு முன்னர், தமது வீடுகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சுத்தப்படுதுமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.