காரைதீவு: விபத்தில் படுகாயமடைந்த வைத்தியசாலை ஊழியர் குவேந் மரணம்.!

காரைதீவு சகா-

விபத்தில் படுகாயமடைந்த கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர் பொன்னுத்துரை குவேந் (வயது 24) சிகிச்சை பலனின்றி மரணமானார்.

காரைதீவைச்சேர்ந்த பொன்னுத்துரை குவேந் எனும் 24 வயதுடைய இளம் ஊழியரே இவ்விதம் விபத்தில் சிக்கி 5நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி மரணித்தவராவார்.அச்சம்பவத்தில் இவர் படுகாயமடைந்து சம்மாந'துறை வைத்தியசாலை அம்பாறை வைத்தியசாலை மட்டக்களப்பு வைத்தியசாலை பின்னர் கண்டிவைத்தியசாலை என மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டிருந்தார்.இறுதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தார்.அங்கிருக்கையில் ஞாயிறன்று காலையில் அவர் மரணமானார். அவரது பூதவுடல் நேற்று திங்கட்கிழமை காரைதீவுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

குடும்பத்தில் 4சகோதரிகளுக்கு ஒரேயொரு கடைசிஆண்பிள்ளையாகப் பிறந்த குவேந் கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஊழியராக சேவையாற்றிவந்தார்.

விபத்து பற்றித் தெரியவருவதாவது !

இச்சம்பவம் கடந்த திங்களன்று இரவு 8மணியளவில் சம்பவித்துள்ளது. இவ்விபத்து வீரமுனை சொறிக்கல்முனை வீதியிலுள்ள வழுக்காமடு பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவர் பயணித்த பல்சர் ரக மோட்டர் சைக்கிளும் எதிராகவந்த இரு சக்கர உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. 

இவர் வைத்தியசாலையிலிருந்து கடமை முடிந்த கையோடு காரைதீவிலுள்ள வீட்டிற்குவந்து பின்னர் வேறொரு வேலைநிமித்தம் சென்றுவரும்போது இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.

போக்குவரத்துப்பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகள மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தில் இவரது கால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தலை மற்றும் நெஞ்சு பலமாக அடிபட்டமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் முன்னர் தெரிவித்திருந்தார்.

இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை காலை கண்டிக்கு கொண்டுசெல்லப்பட்ட இவர் பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மீண்டும் அனுப்பப்பட்டிருந்தார். அங்கிருக்கையில் ஞாயிறன்று காலையில் அவர் மரணமானார். அவரது பூதவுடல் நேற்று திங்கட்கிழமை காரைதீவுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -