எப்.முபாரக்
சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல்மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(27) பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக எரிவாய்வு மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் இவ்வேளையில், இந்திய அரசாங்கத்தை இவ்விடயத்தில் அதின கரிசனை காட்டுமாறு வலியுறுத்தியே இப்பேரணி இடம்பெறவுள்ளது.
இப்பேரணியில் தோப்பூர் அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அமைதியான முறையில் அனல்மின்சார நிலையத்துக்கு எதிராக கோரிக்கை விடுக்கவுள்ளதாக பேரணியை ஏற்பாடு செய்துள்ள மூதூர் பசுமைக்குழு அமைப்பு தெரிவித்துள்ளது.