சிவில் நிர்வாகத்திற்கும் கடற்படைக்கும் என்ன தொடர்பு?
சிவில் நிர்வாகத்தை மீண்டும் ஆயுதப்படையினர் கையிலெடுக்க அனுமதிக்கச் சொல்கிறீர்களா? மீண்டும் இராணுவ ஆதிக்கத்தைக் கிழக்கில் நிலைநாட்ட முதலமைச்சரை வழிவிடச் சொல்கிறீர்களா? கிழக்கு மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்கு முறைக்குள்ளிருக்க முதலமைச்சரை அனுமதிக்கச் சொல்கிறீர்களா?
மகிந்தவின் காலத்து இராணுவக் கெடுபிடிகளை மீண்டும் கொண்டு வரச் சொல்கிறீர்களா? அதுதான் நாட்டில் இன்றுள்ள நல்லாட்சியா? நூற்றுக்கு நூறு வீதம் கிழக்கு மாகாண சபையின் கீழ் வரும் நிகழ்வில் கடற்படையை கலந்து கொள்ளச் சொல்லி முதலமைச்சர் அழைத்தாரா? அல்லது கல்வி அமைச்சர் அழைத்தாரா? அல்லது நாட்டில் தற்போது கடற்புலிகளின் அல்லது அந்நிய படைகளின் அச்சுறுத்தல் இருக்கிறதா? அவ்வாறான அச்சுறுத்தல் காரணமாக கடற்படைப் பாதுகாப்பைத்தான் முதலமைச்சரோ அல்லது கல்வியமைச்சரோ கோரினரா?
இப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அழைக்கப்படாத விருந்தாளியாய் கடற்படையினர் ஏன் வந்தனர்? அதைப்பற்றிக் கேள்வி எழுப்புங்கள். பெரும்பான்மை முதலமைச்சர் ஒருவரை கடற்படையினர் இவ்வாறு அதிகாரத்தைக் காட்டி அடக்க நினைப்பார்களா? அவ்வாறு அடக்கினால் அவர்கள்தான் அடங்கிப் போவார்களா? முஸ்லிம் முதலமைச்சர் என்றால் என்ன அவ்வளவு கேவலமா? தமிழ் கல்வி அமைச்சர் என்றால் எப்படி இழிந்த பிறப்பா? மொத்தத்தில் வடக்கு கிழக்கில் பிறந்த முஸ்லிமும் தமிழனும் என்ன ஆயுதப்படைகளின் அடிமையா? நமது தலைமைகள் என்ன ஆயுதப் படைகளின் ஏவல் பிசாசுகளா? தன்மானமற்ற தரங்கெட்ட பிறப்புக்களா? நெஞ்சி நிமிர்த்தி நின்று கேள்வி கேட்ட முதலமைச்சரை வாழ்த்துங்கள்.
சிவில் நிர்வாகத்தில் ஆயுதப்படைகளின் தலையீட்டை எதிர்த்து நிற்கும் நமது தலைமகனுக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள். தமிழனும் முஸ்லிமும் தன்மானமுள்ளவன் என நிருபித்த நமது முஸ்லிம் முதலமைச்சரைப் போற்றுங்கள். இருந்தாலும் இறந்தாலும் ஒரு நாலாவது எதிர்த்து நின்று மரணிக்க நினைக்கும் மறவனுக்கு மாலையிடுங்கள்.

அடிமை விலங்கை உடைத்து நமது சுதந்திரத்துக்காக குரல் எழுப்பும் குலக்கொடியோனைப் கொஞ்சுங்கள். நமது வீரம் இன்னும் விலை போகவில்லை. நமது தலைமைகள் இன்னும் தலை தாழ்த்தவில்லை. நாம் எழுந்து நின்று கிழக்கை ஆள்வோம். குனிந்து நமது முதுகுகள் கூன் விழத் தேவையில்லை. முதலமைச்சரை வாழ்த்தி, அவரின் மூர்க்கததனத்தைப் போற்றுங்கள். அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும். நாம் துணை நிற்போம் இன்சாஅல்லாஹ்.