தன்னிடம் கொள்ளையிட வந்த நபரொருவருக்கு வித்தியாசமான தண்டனை வழங்கிய கொலம்பியா நாட்டு பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது அந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
பின்னர் குறித்த கொள்ளையரை பிடித்து கொண்ட அந்த பெண் கொள்ளையரிடம் இருந்த ஆயுதத்தை பறித்து கொண்டுள்ளார்.
சந்தேக நபரான கொள்ளையரை தாக்கிய குறித்த பெண் நடுவீதியிலேயே அந்த நபருக்கு தண்டனை வழங்கியுள்ளார்.
அதாவது, கொள்ளையரின் ஆடைகளை கழற்ற வைத்து அவரை நிர்வாணமாக்கியுள்ளார் .
பின்னர் அந்த பெண் கொள்ளையரை தாக்கி விடுவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.