எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில், குறித்த பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம்.மசாஹிர் தலைமையில், பீடத்தின் கேட்போர் கூடத்தில், 2016-05-30 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலையின், இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கு இடம்பெற்றது.
“தேசிய அபிவிருத்தியில் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழிக் கல்வியின் பங்கு” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மூன்றாவது சர்வதேச ஆய்வரங்குக்கு இணைப்பாளராக கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸில் செயற்பட்டார். நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்ட அதேவேளை முக்கிய பேச்சாளராக (Keynote Speech) மலேசியாவின் USIMபல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் துல்கிபிலி பின் அப்துல் ஹனி பங்குகொண்டு, ஆய்வரங்கின் தொனிப்பொருளான தேசிய அபிவிருத்திக்கு இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி கல்வியின் ஊடாக எவ்வாறு பங்களிக்க முடியும் என்ற விரிவான சொற்பொழிவை மலேசியா மற்றும் சர்வதேசத்துடன் தொடர்புபடுத்தி நிகழ்த்தினார். நன்றியுரையை சர்வதேச ஆய்வரங்கின் பொருளாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.ஜலால்டீன் நிகழ்த்தினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக மூன்றாவது சர்வதேச ஆய்வரங்குக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆய்வாளர்களால் 62 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.