பி.எம்.எம்.ஏ.காதர்-
நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பெரும் அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இம்மக்களைப் பாதுகாக்க அரசியல் வாதிகள் முன்வரவில்லையென பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் கவலையுடன் அங்கலாய்;கின்றனர்.
இந்த வெள்ளப் பாதிப்பில் கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம்,சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாழும் மல்வானைப் பிரதேசத்தில் லக்ஸபான,காந்திவளவ, கந்தவத்த, சக்கினாபுர கிராமங்களில் சுமார் ஐயாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெடர்ந்தும் மழை பெய்து வருவதனால் வெள்ளமும் உயர்கின்றது மூன்று அடி தொடக்கம் ஆறு அடிவரை வெள்ளம் தேங்கி நிற்கின்றது இங்கு காந்திவளவ பள்ளிவாசலும், அல்-முபாறக் பாடசாலையையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இவ்வாறு குடியிருப்புக்களும், கடைகளும்,பொது ஸ்தாபனங்களும், எரிபொருள் நிரப்பு நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் இருந்து குடும்பங்கள் வெளியேறி உறவினர்; வீடுகளில் தங்கியுள்ளனர் வெளியேற முடியாமல் சில குடும்பங்கள் மாடிவீடுகளில் தங்கியுள்ளனர் இவ்வாறானவர்களை மீட்கும் பணியில் பொது ஸ்தாபனங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இரவு நேர இருளில் மக்கள் மெழுகுதிரிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏட்பட்டுள்ளது அதேபோன்று உணவுப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதே வேளை புதன்கிழமை மழை சற்று ஓய்ந்திருக்கின்ற போதிலும் மல்வானை நகரில் பத்து அடிக்கு மேல் வெள்ள நீர்மட்டம் உயர்ந்திருக்கின்றது கடற்படையினர் களத்தில் நின்று மக்களை பாது காப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த வெள்ளப்பாதிப்பில் மல்வானையைச் சேர்ந்த 45 வயதுடைய மௌசூம் என்பவர்காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் உணவு சமைத்து வழங்கப்பட்டுவருகின்மை குறிப்பிடத்தக்கது.