எம்.ரி.எம்.யூனுஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு இன்று 18.06.2016 புதன்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வேலை வாய்ப்புத் திணைகளத்தின் ஏற்பாட்டில் உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட தொழில்சேவை நிலையம் நடாத்திய நிகழ்வில் சுமார் 2000 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தொழில், தொழில் சங்கங்களின் ஒன்றிய அமைச்சர் ரவீந்திர சமரவீர பிரதமஅதிதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதில் ஐநூறு இளைஞர் யுவதிகளுகள் தமக்கான தொழிலை பெற்றுக்கொண்டதுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் தொழில் கல்விக்கு பதிவு செய்தனர் இன்னும் பலர் தமக்கான தொழிலுக்கும் பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்வில் பிரண்டேக்ஸ் ஆடைத்தொழிற்சாலைக்கு தெரிவு செய்யப்பட்ட பத்து பேருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சரும் அவரது பாரியாரும் அரச அதிபரும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.