நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அனைத்து அரச பணியாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.
எனினும் குறித்த விடயத்தில் மாற்றம் தேவையென பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் குறித்த சீரற்ற காலநிலையால் அதிகமான அரச பணியாளர்கள் நாடு பூராகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித தீர்வும் பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் அவர்களது விடுமுறையை இரத்து செய்வதில் நியாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சீரற்ற காலநிலையை மையப்படுத்தி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ள அரசாங்கம், அரச பணியாளர்களான ஆசிரியர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அரச பணியாளர்கள் கடமைக்கு செல்ல முடியாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என அரசாங்கம் உறுதியளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.